அண்ணாமலை, விஜய் வாகனத்தில் சோதனை.


உதகையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. உதகையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றிருந்த நிலையில், சுமார் 10 நிமிடங்கள் சோதனை நடத்தப்பட்டது.
காரைக்குடி அருகே தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



