விஜய்-சீமான் கூட்டணி அமைக்க வாய்ப்பு

த.வெ.க. தலைவர் விஜய், தனது நெருங்கிய திரைத்துறை நண்பர் ஒருவர் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
யோசிக்கும் சீமான்
"நாம் இருவரும் தனித்தனியாக நின்றால், கணிசமான வாக்குகளைத் தான் பெற முடியும். தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றால், இருவரும் இணைந்த கைகளானால் மட்டுமே அது சாத்தியம்" என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், உடனே பதில் எதுவும் சொல்லாத சீமான், யோசிக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், த.வெ.க. கூட்டணியில், பா.ம.க. (டாக்டர் ராமதாஸ் அணி), ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. ஆகியவற்றை இணைக்கவும் தூதுவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. "



