அஜித்துக்கு ரசிகர்கள் செம பதிலடி!
நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், போர்ச்சுகலில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் தனது அணி பங்கேற்க உள்ளதாகவும், அதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சில ரசிகர்கள் அஜித் முன்பு கூறிய அறிவுரைகளையே அவருக்குத் திருப்பிக் கொடுத்து கலாய்த்து வருகின்றனர். "முதலில் குடும்பத்தை பாருங்கள்.. வேலை, படிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று அஜித் பலமுறை ரசிகர்களிடம் கூறியதை சுட்டிக்காட்டி, "சாரி தல.. எங்க குடும்பத்தைப் பார்க்க வேண்டியிருக்கு!” என சிலர் பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் ரசிகர்கள் பலர் அவரது ரேஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இந்த பழைய பேச்சை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.



