சென்னையில் எல்பிஜி தட்டுப்பாடுஆட்டோக்கள் தவிப்பு

சென்னையில் ஆட்டோ எல்பிஜி எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டுநர்கள் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து, நிரப்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், காஸ் சிலிண்டர், ஆட்டோ எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மாற்று வழிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், வாகனங்ளுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயு கிடைக்காததால், ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.



