ஆவின் விலை ஏற்றம்-ஏழை மக்கள் மீதான தாக்குதல்: அன்புமணி.
ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தமிழக மக்கள் தவித்து வரும் நிலையில், ஆவின் நிறுவனமும் அதன் பங்குக்கு விலைகளை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஏழை மக்கள் மீதான தாக்குதலாகும்.
ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி மக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அரிசி எங்கு வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
ஆவின் பால் பொருள்களின் விலைகளை உயர்த்துவது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாகத்தான் அமையும்.
வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.
– பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை



