இலாயக்கற்ற தவெக அரசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதான ரெய்டு, மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மாநிலத்தை உலுக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற தவெக அரசு.
1. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்
2. பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்
3. நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
4. ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு
5. இராமநாதபுரம் இரட்டைக் கொலை
6. சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை
7. அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.



