அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றவியல் நடவடிக்கை கோரி அதிமுக வழக்கு!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவில் இருந்து அதிகமான நிர்வாகிகள் தவெகவுக்கு வரவுள்ளதாக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 21ஆம் தேதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.



