பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை: கமல்ஹாசன்

அன்பு ஒரு போதும் விஷமமாக மாறக் கூடாது; மொழியும் அப்படித்தான். என்னிடம் யாரும் மொழியை திணிக்க முடியாது.
நான் 27 வயது வரை இந்தி மொழியை கற்றுக் கொள்ளவே இல்லை. ஒரு வார்த்தை கூட தெரியாது, பிறகு பேசும் அளவிற்கு இந்தி கற்றுக் கொண்டேன், ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது.
நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா; சினிமாவால் எல்லா மொழியையும் பேச முடியும்.
மொழி என் பண்பாட்டுப் பெருமை. என் மொழியை நேசிக்க, நான் பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை.
எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள், அந்த முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள்; வாழ்க்கைக்கு தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்.



