ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்திற்கு 5,040 ரூபாய் உயர்வு..! ரூ.20ஆயிரம் அதிகரித்த வெள்ளி விலை

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் 22,800 ரூபாய் குறைந்த நிலையில், நேற்று திடீரென சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.இந்த நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியில் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 20ஆயிரம் ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



