மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன் அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து அதிமுக எக்ஸ் பதிவில், ‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



