லாக் டவுன் வதந்தி. - மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக எரிபொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.



