முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
உள்ளூர் செய்திகள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் தற்போது 25 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றும் 25 நாட்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொத்தம் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு உள்ளதால் தற்போதைக்கு எரிபொருள்களின் விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யூரோ சரிவு: ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை உயரும் என்ற அச்சத்தால் யூரோ (Euro) பலவீனமடைந்து வருகிறது.



