பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.55 உயர்வு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தியுள்ளது; இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.



