பிடி உஷா கணவர் மரணம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான பி.டி.உஷாவின் கணவர் வி.சீனிவாசன் இன்று காலை காலமானார். திக்கோடி பெருமாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் சீனிவாசன் அதிகாலை 1:00 மணியளவில் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர்.
பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசனுக்கு 67 வயது. குட்டிக்காடு பொன்னானியின் வெங்கலி தாராவட்டில் நாராயணன் - சரோஜினிக்கு மகனாக வி.சீனிவாசன் பிறந்தார். அவர் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் தூரத்து உறவினரான பி.டி.உஷாவை 1991 ஆம் ஆண்டு மணந்தார். பி.டி. உஷாவின் கணவரின் திடீர் மரணம் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.



