ஆப்கானிஸ்தானின் மீது பாகிஸ்தான் தாக்குதல்.

பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு தக்க பதிலடி இருக்கும் என்று பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.



