விஜயின் இல்லத்திற்கு விஜயின் ஆஸ்தான ஜோதிடர் வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடைந்திருக்கும் அபார வெற்றி, அவரது அரசியல் ஆலோசனைகளையும் தாண்டி அவரது ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட்’ மீதும் பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றியைப் பற்றிய அவரது முன்கூட்டிய கணிப்புகள் பலித்தது மட்டுமின்றி, வாக்கு எண்ணிக்கையின் இந்த முக்கிய நாளில் காலை முதலே விஜய் வீட்டிற்குள் முதலாக நுழைந்ததும் ரத்தன் பண்டிட்தான் என்ற செய்தி அவரது செல்வாக்கை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இந்த அசாதாரண வெற்றியினால் அவரது முக்கியத்துவம் பல மடங்கு கூடியுள்ளது.



