10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி

2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.47 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்



