டெல்லி ஓட்டலில் தீ 21 பேர் கருகி னர்

டெல்லியில் இன்று காலை 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் உள்ள பிரபலமான ‘லெமன் க்ரீன்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நிலைமையின் தீவிரத்தை அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.
தீ விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தகவல். பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வெளிநாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையை டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.



