திமுகவை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது -அமைச்சர் நேரு

அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று ஒரு பத்திரிகை எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையும், இன்னொரு பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன. திமுக யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றார்.
சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி முதலிடம் என்று வெளியான செய்தியை குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.



