பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் இதுவரை 32 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய மிக வலுவான நிலநடுக்கம் என கூறப்படுகிறது.



