முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › அரசு மருத்துவமனையில் திருடு போகும் வீடியோ வைரல்
உள்ளூர் செய்திகள் அரசு மருத்துவமனையில் திருடு போகும் வீடியோ வைரல்
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பழைய அரசு மருத்துவமனை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது உள்ளே பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது*
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் உள்ள லைட் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை திருடிச் செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் காவலாளி இல்லாததை பயன்படுத்தி,அந்த மருத்துவமனை வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் சிலர் அங்கு புகுந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனைக்குள் இருக்கும் பொருட்களை இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாக தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



