முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › அடுக்குமாடி குடியிருப்பில் புதிய பைக் திருட்டு
உள்ளூர் செய்திகள் அடுக்குமாடி குடியிருப்பில் புதிய பைக் திருட்டு
பெருங்களத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் வளாகத்தில் நிறுத்தப்பட்ட புதிய பல்சர் பைக் திருட்டு, சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்புஏற்படுத்தி உள்ளது
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் மேற்கு லக்ஷ்மி நகர், நேரு காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நவீன் குமார் (வயது-27) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர்,சிறுக சிறுக பணம் சேர்த்து புதியதாக பல்சர் 220 என்ற இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
வழக்கம்போல் இரவு தனது குடியிருப்பு வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்று உள்ளார்.
மறுநாள் பணிக்கு செல்வதற்காக எழுந்து வெளிய வந்து பார்த்த போது,நிறுத்தி வைத்திருந்த ஆசையாக வாங்கிய இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூன்று இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அதில் ஒருவர் மட்டும் காம்பவுண்டுக்குள் புகுந்து, நிறுத்தப்பட்டிருந்த பல்சர் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை சத்தம் இல்லாமல் உடைத்து,வெளியே தள்ளிக் கொண்டு வந்துள்ளார்.பின்னர் தயாராக காத்திருந்த மற்ற இருவருடன் சேர்ந்து, திருடிய பைக்கை டோ செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் நவீன் குமார், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விரைவில் வாகனத்தை கண்டு பிடித்து தருவதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர் பகுதியில் சமீப நாட்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



