முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › மின்சார ரயில் தடம் புரண்டது!
உள்ளூர் செய்திகள் மின்சார ரயில் தடம் புரண்டது!
சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை 10.40 மணியளவில் மின்சார ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது.
இதனால் தாம்பரம்–கடற்கரை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
தற்போது கடற்கரைக்கு பதிலாக பூங்கா, எழும்பூர் நிலையங்களில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.



