ஆவினில் நெய், பனீர், வெண்ணெய் கிடைக்காமல் அவதி!
ஆவினில் நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் கிடைக்காமல் நுகர்வோர் ஏமாற்றம்.
ஆவினுக்கான பால் கொள்முதல் குறைந்து வருவதால், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவினுக்கு வர வேண்டிய பாலை தனியாருக்கு திருப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவதாக புகார்.
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் நிலையில், வெண்ணெய், நெய், பால் பவுடர் கிடைக்காததால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிப்பு.
பண்டிகைக்கு முன்பாக நெய், பனீர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.



