ஜெம் வீரமணி மீது ஒரு பாலியல் வழக்கு
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்போது ‘ஜெம்’ வீரமணி மீது வழக்கு பாய்ந்துள்ளது.
அதாவது, கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.
அந்த வழக்கில், கல்வி உதவிகள் வழங்கி தனது மகளை வீட்டுக்கு வரவழைத்து வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததால், தனது மகள் வீட்டுக்கு வந்தவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் 2004-ம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



