வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.
இதற்கிடையில், வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்து வரும் நிலையில், இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் பலர் அவதியடைந்துள்ளனர்.



