தாம்பரம் கட்டிட பொறியாளர் சங்க விழா -சங்கர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு சிறப்பு விருது

தாம்பரம் சிவில் இன்ஜினியரஸ் அசோசியேஷன் சார்பாக பொறியாளர் தினம் மற்றும் எக்செலென்ஸ் இன் இன்ஜினியரிங் என்ற விருது வழங்கும் விழா பல்லாவரம் ஹோட்டல் என் .கே கிராண்ட் பார்க் இல் வைத்து விமர்சையாக கொண்டப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் முதன்மை பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி விருதுகளை வழங்கினார்.விழாவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கட்டிடவியல் துறையின் பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ராசி பொறியியல் கல்லூரி, படப்பை, எம் ஜி ஆர் பல்கலைக்கழகம், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை,பாரத் பல்கலைக்கழகம்,மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் துறையின் தலைவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் 100க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குரோம்பேட்டை, சிட்லபாக்கம், தாம்பரம் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரும் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் குழுமத் தலைவர் கே.எச். சங்கரநாராயணனுக்கு எக்செலென்ஸ் இன் இன்ஜினியரிங் என்ற விருது வழங்கி கௌரவித்தனர்.
தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியன் தலைவர் டி. திருஞானசம்பந்தம்,துணை தலைவர் பி.ஜெயக்கொடி ,செயலாளர் டி பி சரவணன் ,பொருளாளர் என்.பரணிதரன், இணை செயலாளர் கே பி டி அகிலன், இணை பொருளாளர் கே. ஹெச். சங்கரநாராயணன் ,திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.கருணா ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.



