கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தவிர்க்க கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்...

சென்னை: கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என திமுக அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் "பொதுவெளியில் கூட்டணி கட்சியினர் குறித்த கருத்துகளை திமுகவினர் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்; தேவையற்ற சர்ச்சைகளால் எவ்வித பலனும் இல்லை.
ஆக்கப்பூர்வ கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திமுகவினர் செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை திமுக தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்."



