அதிமுக டிஜிட்டல் முறையில் அதிமுக பிரச்சாரம்...

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆளும் திமுக, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பரப்புரை பயணத்தை தீவிரப்படுத்தும் என அறிவித்துள்ளது.அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுகவும் விலைவாசி உயர்வை மையமாகக் கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், விடியா திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்.”இந்த பிரச்சாரத்தில், வீடு வீடாகச் சென்று மின்சாரம், குடிநீர், எரிவாயு போன்ற பில்-களை அடிப்படையாகக் கொண்டு விலைவாசி உயர்வின் தாக்கத்தை எளிய முறையில் விளக்குவது குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசியலில் புதிய வகை டிஜிட்டல்-அடிப்படையிலான வீடு வீடாக செய்யப்படும் பிரச்சார முயற்சியாகத் திகழ்கிறது.” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.



