பிப்ரவரி 5ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்.

பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 12 மணியளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
2026 ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. தேர்தலையொட்டி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



