திருச்சூர் பட்டாசு ரூபத்தில் 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர் மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். அப்போது வாண வேடிக்கைகள் அதிக அளவில் நடைபெறும். அதற்காக இந்தத் தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.இதில் 13 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்



