ஆவின் பாலகம் நடத்துபவர் மீது தாக்குதல்

சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பிரதான சாலையில் ஆவின் பாலகம் நடத்தும் நபரை மூன்று பேர், தாக்கினர் இதன் சிசிடிவி காட்சி வெளியானது
சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பிரதானசாலையில் சங்கரநாராயணன்(63) என்பவர் ஆவின் பாலகம் நடத்திவந்தார்,
இன்று அவர் கடையில் பால் வாங்க வந்த நபர் கேட்ட பால் இல்லை என சங்கரநாராயணன் கூறியுள்ளார், இதனால் ஆத்திரத்தில் கொலை மிரட்டல் விடுத்த சென்ற நபர் மேலும் இருவரை அழைத்து வந்து சங்கரநராயணனை தாக்கியுள்ளனர், மேலும் பால் அடுக்கும் பிளாஸ்டிக் டப்பாவால் தலை முகத்தில் அடித்ததில் முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 3 தையல் போடப்பட்டது,
மேலும் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் தேடிவருகிறார்கள்.



