‘துரோகியே’ என்று அழைத்த ராகுல் காந்தி... ‘நாட்டின் எதிரி’ என பதிலடி கொடுத்த அமைச்சர்!

நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராகுல் காந்தி பங்கேற்றார்
அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்தப் பகுதியை கடந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி, "வணக்கம் சகோதரரே, எனது துரோகி நண்பரே. கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு வருவீர்கள்" என்று கூறினார்.
மேலும், ராகுல் காந்தி அவருடன் கை குலுக்க முயன்றார். அதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “நாட்டின் எதிரி” என்று கூறியபடி ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார்.



