காகங்கள் உயிரிழப்பு - வைரஸ் தொற்று உறுதி.

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றில் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும், இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் என கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



