மருத்துவமனையில் ரவுடி கொலை - பணியிட நீக்கம் செய்யப்பட்ட சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கிரிதரன் தற்கொலைசெய்து கொண்டார்.
கடந்த மாதம் 12-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதி என்ற ஆதிகேசவன் (20) என்பவா் மா்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அன்று கவனக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 5 பேரை பணியிட நீக்கம் செய்யப்பட்டனா்.
இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கிரிதரன் மின்விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு இறந்து கிடந்தாா் என்று கூறப்படுகிறது.



