தாம்பரம் அருகே ஆட்டோ திருடும் வீடியோ வைரல்

தாம்பரம் அருகே வரதராஜ புரத்தில் ஆட்டோ திருட்டு-3 இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியானது
தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பாரத் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்லபாண்டியன்.இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த 23-ம் தேதி நள்ளிரவு வழக்கம் போல் வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.மறுநாள் காலை வெளியில் வந்து பார்த்த போது,நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து மணிமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மூன்று இளைஞர்கள் எந்தவித பதட்டமும் இன்றி மிக சர்வ சாதாரணமாக ஆட்டோவை திருடிச் செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நெடுங்குன்றம் பகுதியில் ஆட்டோக்கள் பழுது பார்க்கும் இடத்தில் செல்லபாண்டியனின் ஆட்டோ நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இடத்தின் உரிமையாளரிடம் கேட்டபோது, ஆட்டோவை பணம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளார். அது திருட்டு ஆட்டோ எனக் கூறி நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சதன்ராஜ் (வயது-27) கைது செய்து மேலும் விசாரணையில் சேலையூர் பகுதியை சேர்ந்த 14,வயது சிறுவன் மற்றும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த 17,வயது சிறுவன் என இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப் பட்டு, இது குறித்து மணிமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



