திருமண விழாவுக்கு ஜோடியாக வந்த விஜய் - த்ரிஷா!.

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர்.
இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



