தங்கம் விலை அதிரடி சரிவு..!

சென்னையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டு போக்குகளின் அடிப்படையில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் தொடர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



