பரபரப்பு தகவல்! அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் தவெக? எத்தனை இடங்கள்?

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், நடிகர் விஜய்யின் த.வெ.க. இணைவதற்கான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓரிரு நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச விஜய் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கணக்கு பலிக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.வுக்கு 50 இடங்களும், விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை முன்வைத்தே பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



