சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டி

சட்டசபை தேர்தலை த.வெ.க. தனித்தே சந்திப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி என்பது உறுதியாகி இருக்கிறது.
தற்போது வரை, த.வெ.க.வில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.
த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான நடிகர் விஜய், தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இனி, த.வெ.க.வுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி? என்பதை தேர்தல் முடிவு சொல்லிவிடும்.



