GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › மலபார் மஷ்ரூம் கறி...
தமிழகம்

மலபார் மஷ்ரூம் கறி...

👤 Admin 🕐 03 May 2026, 05:29 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தேவையான பொருட்கள் :- காளான் - 250 கிராம், பச்சைப் பட்டாணி - கப், வெங்காயம் (பெரியது) -1 (நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் (பெரியது) -1 (விழுதாக அரைக்கவும்), தக்காளி (பெரியது) -1 (விழுதாக அரைக்கவும்), முந்திரி-10 (விழுதாக அரைக்கவும்), கஸ்தூரி மேத்தி பொடி - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 சிட்டிகை, சீரகத் தூள் -1 டீஸ்பூன், தனியாத்தூள் -1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், தயிர் -2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது-1 டீஸ்பூன், கொத்த மல்லித்தழை-1 கைப்பிடி, ஏலக்காய்--1, மிளகு-6, பிரியாணி இலை-1, உப்பு தேவைக்கு, சர்க்கரை-1 சிட்டிகை, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், நெய்-2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :- காளானை சுத்தம் செய்து பாதியாக வெட்டிக் கொள்ளவும். நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.காளானுடன் பொரித்த வெங்காயம், கஸ்தூரி மேத்தி பொடி, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது (ஒரு டீஸ்பூன் அளவு), தயிர், பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய், டீஸ்பூன் நெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் அதில் ஏலக்காய், மிளகு, பிரியாணி இலை ஆகிய வற்றை போட்டு தாளிக்கவும். பின்பு அதில் வெங்காய விழுதைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு மீதமிருக் கும் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை நன்றாக வதக்கவும். பின்பு அதில் சீரகத்தூள், தனியாத்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து கலக்கவும் (இப்போது தேவைப்பட்டால் இந்தக் கலவையில் சிறிது சூடான தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்). பின்னர் அதில் தயாரித்து வைத்திருக்கும் காளான் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அதில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கிளறவும். பிறகு முந்திரி விழுதை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். பின்னர் அந்தக் கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழையைத் தூவி, ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement