விஜயின் தந்தை திருத்தணியில் சாமி தரிசனம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகன் அரசியலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். கட்சியின் முதல் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், தனது மகனின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி அவர் முருகப்பெருமானை வழிபட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்திருந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையின் போது அவரது தந்தை திருத்தணியில் பிரார்த்தனை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.



