வரி உயர்வால் எகிறியது தங்கத்தின் விலை.! பவுனுக்கு 8560 உயர்வு

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்றும் (மே 13) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,560உயர்ந்து, ரூ.1,23,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து, ரூ.330-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.30,000 அதிகரித்து ரூ.3,30,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடி விலையுயர்வை சந்தித்த நிலையில், மத்திய அரசின் வரி உயர்வுக்குப் பின் இன்றும் தங்கத்தின் விலை, அதிரடியாக உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.



