ஆன்லைன் மூலம் மது வாங்குவது எப்படி வீடியோ வெளியிட்ட டாஸ்மாக்

இன்று முதல் ஆன்லைன் மூலம் மது வாங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது
இது தொடர்பாக ஒரு செயலியையும் டாஸ்மாக் உருவாக்கி உள்ளது இதில் எப்படி ஆன்லைன் மூலம் மது வாங்க வேண்டும் என்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது அதில்
ஆன்லைன் முன்பதிவுக்கான இணையதளத்தில் நுகர்வோர் முதலில் தங்கள் அருகில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் தங்களுக்கு தேவையான மது வகையை தேர்வு செய்ய வேண்டும். பணம் செலுத்தும் பக்கத்தில் செல்போன் எண் கொடுத்து ஓடிபி பெற்று, அதை பதிவு செய்து, பணம் செலுத்த வேண்டும். இதையடுத்து, கியூஆர் குறியீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்வோர் டவுன்லோட் செய்து, முன்பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணியாளரிடம் காண்பிக்க வேண்டும்.
கடை பணியாளர் கடையில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்வோரின் ரசிதை ஸ்கேன் செய்வார், பின்னர் நுகர்வோர் பதிவு செய்து வந்த மதுபானத்தை எடுத்து அதையும் ஸ்கேன் செய்வார், இரண்டும் சரியாக உள்ளது உறுதியான பிறகு ரசீதை பிரின்ட் செய்யும் பக்கம் வரும். அதில் ரசீதை பிரின்ட் செய்து மதுபானத்தை நுகர்வோரிடம் வழங்குவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



