முகப்பு ›
விளையாட்டு › ஆர்.சி.பி.அணிக்கு 20 கோடி பரிசு
விளையாட்டு ஆர்.சி.பி.அணிக்கு 20 கோடி பரிசு

ஐபிஎல் இறுதி போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றது. இதற்கு முன்னர் சிஎஸ்கே அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 2019, 2020-ம் ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்திருந்தன. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.



