முகப்பு ›
விளையாட்டு › தமிழ்ச் சிறுமியின் சாதனை
விளையாட்டு தமிழ்ச் சிறுமியின் சாதனை
லண்டனைச் சேர்ந்த தமிழ் இந்திய வம்சாவளிச் சிறுமியான போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), செஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் போர்டில் (Top Board) விளையாடிய அவர், 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்றுத் தனது மூன்றாவது மற்றும் இறுதி Woman Grandmaster தகுதியை நிறைவு செய்தார். 11 வயதே ஆன போதனா, இதற்கு முன்பு உக்ரைனின் கத்ரீனா லக்னோ (Kateryna Lagno) தனது 12 வயதில் படைத்திருந்த மிக இளம் வயது Woman Grandmaster சாதனையை முறியடித்துள்ளார்.லண்டனின் ஹாரோ பகுதியில் வசிக்கும் இவரது குடும்பம், தமிழ்நாட்டின் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டது. கோவிட் லாக்டவுன் காலத்தில் தனது 5-வது வயதில் தற்செயலாக செஸ் விளையாடத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது



