நேபாளத்தில் பிணங்களிடம் கொள்ளை

நேபாள-சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, உடல்களை மீட்கும் பணிகளின் போது உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து தங்கக் கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் கழற்றித் திருடப்படுவதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பரவலாகப் பகிரப்பட்டு வரும் அந்தப் பதிவுகளில்...
மீட்கப்பட வேண்டிய சடலங்களில் இருந்து அவர்கள் தங்கக் கம்மல்களைக் கழற்றி எடுத்துச் செல்கிறார்கள். இது உங்களுக்குப் பாவத்தைச் சேர்க்கும், இதற்கான தண்டனையை நாம் இந்த ஜென்மத்திலேயே அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று மக்கள் தங்களது ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.



