குரோம்பேட்டை கைலாய யாத்திரை குழுவின் 49 பேர் கதி என்ன?
நேபாள வெள்ளத்தில் குரோம்பேட்டை சேர்ந்த கைலாய யாத்திரை குழுவினர் 49 பேர் சிக்கி உள்ளனர் அவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் மாரவேல் நாகப்பன் என்பவர் மகாதேவ் கைலாஷ் யாத்திரா நடத்திவருகிறார்,
இவர் யாத்திரா சார்பில் கடந்த 14 ம் தேதி 49 பேருடன் கைலாய யாத்திரை புறப்பட்டார்
அதில் குரோம்பேட்டை, ஜமீன் பல்லாவரம் என 9 பேர் உள்ளிட்ட 49 பேர் சென்றுள்ளனர், இதில் யாத்திரை நடத்தும் உரிமையாளர் மகன் சத்தியநாராயணன்(28) என்பவரும் உள்ளார்
இவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து 14ம் தேதி விமானம் மூலம் நேபாளம் நாடு தலைநகர் காட்மண்டு சென்றனர் அங்கு இருந்து பேரூந்து மூலமாக நேப்பாளம்-சீனா எல்லை கடந்து கைலாய யாத்திரை சென்றுள்ளனர்,
நேற்று இரவு கடைசியாக பேசிய மாரவேல் நாகப்பன் அங்குள்ளவர்கள் இன்று காலை சீனானா- நேபாள எல்லையில் இமிகிரேசன் முடித்து நேபாளம் வந்து காட்மண்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரவேண்டியவர்கள் என தெரிவித்தார்
குறிப்பாக விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு இந்த குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது,
இதனால் அவர்களின் கதி என்ன என யாத்திரை அழைத்து சென்றவர்களும்,
ஜமீன்ராயப்பேட்டை பகுதிதை சேர்ந்த குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர்,
எனவே அவர்களை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்து மீட்டு அழைத்துவரவேண்டும் என கோர்க்கை விடுத்தனர்.
குரோம்பேட்டையை சேர்ந்த 49 பேர் குழுவில் குரோம்பேட்டை ஜமின்ராயப்பேட்டையை சேர்ந்த 9 பேர், காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு,கோவை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர்....
குரோம்பேட்டை ஜமீன்பல்லாவரத்தை சேர்ந்த குழுவினர்
பெயர் விவரம் வருமாறு
1,அமுதா(57) இல்லதரசி
2, கிஷோர்(35)
3,வேழவேந்தன்(58)
4, ராஜலஷ்மி(55)
5, விக்ரமன்(65)
6, மஞ்சுளா(60)
7, செந்தில்பழனி(46)
1,சரஸ்வதி,
2,கோபால்
3, லதா,
4, பானுமதி
5, அருட்செல்வி
6, கோவிந்தராஜ்
இவர்களது பெற்றோர் யார் திரை நிறுவன அலுவலகத்திற்கு வந்து விசாரித்து வருகிறார்கள்
ஏற்கனவே தமிழ்நாடு சேர்ந்த 22 பேர்மீட்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது



