கட்சி நிதி பெயரில் கொள்ளை: முதல்வர் விஜய் குற்றச்சாட்டு.

போதைப் பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவி கொட்டிக் கிடக்கு; இதனை ஆரம்ப நிலையிலேயே ஏன் கட்டுப்படுத்தவில்லை?
டாஸ்மாக்கில் "கட்சி நிதி" என அடித்த கொள்ளையை எல்லாம் கஜானாவில் சேர்த்து வருகிறோம் - ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை.
டாஸ்மாக் ஊழல் குறித்த முதலமைச்சரின் உரையை கேட்ட உடன் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து அமளி; கூச்சல் குழப்பம்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச அனுமதி அளிக்க வேண்டுமென தி.மு.க.வினர் கூச்சல்.
முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து பின்னர் அவைக்கு திரும்பினர்.



