முகப்பு ›
உலக செய்திகள் › உச்ச நீதிமன்றத்தை கொளுத்திய போராட்டக்காரர்கள்
உலக செய்திகள் உச்ச நீதிமன்றத்தை கொளுத்திய போராட்டக்காரர்கள்
அல்பேனியா நாட்டில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் தலைநகரான டிரானாவில், ஊழல், கல்விச் செலவு உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய அரசு எதிர்ப்புப் போராட்டம், ஐந்தாவது நாளில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் அல்பேனிய உச்ச நீதிமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அதற்குத் தீ வைத்தனர். நீதிமன்ற அலுவலகங்கள் சாம்பலாகின, மத்திய வங்கியின் நுழைவு வாயில் அடித்து நொறுக்கப்பட்டது. பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோருகின்றனர். காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், நீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தியும், தெருக்களில் அமைதி திரும்பவில்லை.
அல்பேனியா மட்டும் அல்லாமல் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தொடர்ந்து போராட்டம் கலவரம் நடந்து வருகிறது



